செய்திகள்
கோப்புபடம்

அவிநாசி கோவில் திருப்பணி - அதிகாரிகள் ஆலோசனை

Published On 2021-10-01 05:20 GMT   |   Update On 2021-10-01 05:20 GMT
தேர் நிறுத்தும் இடத்தை பார்வையிட்ட அமைச்சர், ஷெட் மிகவும் பழுதடைந்துள்ளதால் மாற்றியமைக்க அறிவுரை வழங்கினார்.
அவிநாசி:

கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

கடந்த மாதம் அவிநாசிக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலை பார்வையிட்டார். தேர் நிறுத்தும் இடத்தை பார்வையிட்ட அமைச்சர், ஷெட் மிகவும் பழுதடைந்துள்ளதால் மாற்றியமைக்க அறிவுரை வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் கோவிலை பார்வையிட்டு திருப்பணியின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேவைகள் குறித்து கோவில் நிர்வாகத்தினரிடம் நேரில் கேட்டறிந்தார்.

இது தொடர்பாக கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி செயற்பொறியாளர் கண்ணன், கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் முன்னிலையில் ராயம்பாளையம், புதுப்பாளையம் மிராசுதாரர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News