செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை பகுதியில் மின்வெட்டால் மக்கள் கடும் அவதி

Published On 2021-09-27 12:07 GMT   |   Update On 2021-09-27 12:07 GMT
சம்பவத்தன்று மாலை மின்சாரம் தடைபட்டு இரவு வெகுநேரம் வரை மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
உடுமலை:

உடுமலை சிங்கப்பூர் நகர், ஜானி பேகம்காலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் கட்டிடம் மற்றும் துப்புரவு தொழில் செய்யும் தொழிலாளர்களாகவே உள்ளனர்.

இப்பகுதியில் சமீப காலமாக தொடர் மின்வெட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சம்பவத்தன்று மாலை மின்சாரம் தடைபட்டு இரவு வெகுநேரம் வரை மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 

இதனால் பெண்கள் வீட்டு வேலைகளை மேற்கொள்ள முடியாமலும் மாணவர்கள் படிக்க முடியாமலும் அவதிக்குள்ளாயினர். மேலும் இந்த பகுதியில் உள்ள தளி சாலை மேம்பாலம் இருளில் மூழ்கியதால் சிறுசிறு விபத்துகள் ஏற்பட்டது.   

வவ்வால் மின் மாற்றியில் மோதியதால் ஏற்பட்ட மின் தடை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற மின்தடை ஏற்படாமல் பராமரிக்கவேண்டும் வேண்டியது அவசியம் என்பது அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News