செய்திகள்
கோப்புபடம்.

‘பிட் இந்தியா’ வினாடி, வினா போட்டி - பள்ளி மாணவர்கள் 30ந்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுகோள்

Published On 2021-09-26 07:53 GMT   |   Update On 2021-09-26 07:53 GMT
தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் போட்டி நடத்தப்படுகின்றன. பள்ளிக்கு தலா 2பேர் பங்கேற்கலாம்.
திருப்பூர்:

மத்திய அரசின் ‘பிட் இந்தியா’ திட்டத்தின் கீழ் நடத்தப்படும் வினாடி-வினா போட்டிற்கு ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 2 மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ‘பிட் இந்தியா’ இயக்கத்தை ஆகஸ்டு 29, 2019ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 

இதை முன்னிட்டு ஆண்டுதோறும் பள்ளிகள், கல்லூரிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு பள்ளிகள் தாமதமாக தொடங்கியதால் மாணவர்கள் பங்கேற்கும் விதமாக வினாடி - வினா போட்டியை பள்ளிகளில் அக்டோபர் 29-ந்தேதி  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் போட்டி நடத்தப்படுகின்றன. 

பள்ளிக்கு தலா 2பேர் பங்கேற்கலாம்.முன்பதிவு இலவசம். அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் உண்டு. மேலும் fitindia.nta.ac.in என்ற இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News