செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளர்கள்

சம்பளம் வழங்க கோரி கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டம்

Published On 2021-09-24 09:11 GMT   |   Update On 2021-09-24 09:11 GMT
இவர்களுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தோடு முடிவடைந்துவிட்டது.
திருப்பூர்:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தோடு முடிவடைந்துவிட்டது. 

அதன்பிறகு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் கடந்த 5 மாதங்களாக சம்பளம் பெறாமல் பணிபுரிந்து வருகின்றனர். எனவே சம்பளத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என கவுரவ விரிவுரையாளர்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இதையடுத்து திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியின் 21 விரிவுரையாளர்கள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு வாயில் முழுக்க போராட்டம் நடத்தினர்.

போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராஜூ கூறுகையில்,

‘’கொரோனா காலகட்டமாக இருந்தாலும் மாணவர் சேர்க்கை, இணைய வழியில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதோடு கல்விசார் பணிகளான அக மதிப்பீட்டு மதிப்பெண் வழங்குதல், தேர்வு நடத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறோம். கடந்த ஏப்ரல் முதல் 5 மாதங்களாக இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றார். 
Tags:    

Similar News