செய்திகள்
வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வருவதை படத்தில் காணலாம்.

சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறும் திருப்பூர் ரெயில் நிலைய நடைமேம்பாலம்-தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2021-09-22 11:39 GMT   |   Update On 2021-09-22 11:39 GMT
ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சாலைக்கு வரும் பயணிகள் வசதிக்காக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :

திருப்பூர் ரெயில் நிலையம்  வழியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் , வெளிமாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே சாலைக்கு வரும் பயணிகள் வசதிக் காக  நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பயணிகள் அதனை பயன்படுத்தாமல் உள்ளனர். இதனால் நடைமேம்பாலம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

குடிமகன்கள் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கு போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகள் நடைபாதையில் குவிந்து கிடக்கிறது. மேலும் வடமாநில தொழிலாளர்கள் இரவு தங்குவதற்கு நடைமேம்பாலத்தை பயன்படுத்துகின்றனர்.

இதனால் குடியிருப்புபோல் மாறி வருகிறது. எனவே இதனை தடுக்க ரெயில்வே போலீசார் இரவு நேரங்களில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News