செய்திகள்
கோப்புபடம்

கடன் திட்டங்கள் குறித்து வங்கியாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை

Published On 2021-09-22 09:58 GMT   |   Update On 2021-09-22 09:58 GMT
திருப்பூர் ஐ.கே.எப்., வளாகத்தில் 40 அரங்குகளுடன் ஏற்றுமதி உற்சவ விழா நடக்கவுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம்  நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸாண்டர் வரவேற்றார். தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு விரைவாக கடனுதவி வழங்குவது, தெருவோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன், மானியத்துடன் கூடிய தொழில் கடன்களை விரிவாக வழங்குவது குறித்து கலெக்டர் அறிவுரைகளை வழங்கினார்.

அடுக்குமாடி வீடு பெறும் பயனாளிகள் எளிய முறையில் வங்கி கடன் பெற்று பங்குத் தொகையை செலுத்த வழிவகை செய்வது குறித்தும் வங்கியாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. 

திருப்பூர் ஐ.கே.எப்., வளாகத்தில் 40 அரங்குகளுடன் ஏற்றுமதி உற்சவ விழா நடக்கவுள்ளது.இதில் புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவது, ஏற்றுமதி வர்த்தகத்தை லாபகரமாக நடத்துவது, மத்திய மாநில அரசுகள் வழங்கும் கடன் திட்டங்கள், சலுகை குறித்த கண்காட்சி ஸ்டால்கள் இடம்பெற உள்ளன. 

வங்கியாளர்கள் ஸ்டால் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News