செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு

Published On 2021-09-16 05:29 GMT   |   Update On 2021-09-16 05:29 GMT
கொரோனா தொற்று அதிகரிப்பு, பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் இந்த மாத தொடக்கத்தில் ரூ.4.20 ஆக இருந்த முட்டை விலை 4-ந்தேதி 10 காசுகள் உயர்ந்து ரூ.4.30 ஆனது. பின்னர் 6-ந்தேதி ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 10 நாட்களாக இதே விலை நீடித்தது.

இந்த நிலையில் இன்று 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.4.50- ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பு, பிற மண்டலங்களில் முட்டை நுகர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பிற மண்டலங்களில் முட்டை விலை ஆமதாபாத் - ரூ.4.60, சென்னை - ரூ.4.60, டெல்லி - ரூ.4.55, மும்பை - ரூ.4.50, விஜயவாடா - ரூ.4.41 ஆக உள்ளது.
Tags:    

Similar News