செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டிடப்பணிகள் தீவிரம்

Published On 2021-09-16 05:16 GMT   |   Update On 2021-09-16 05:16 GMT
அரசு கலைக் கல்லூரி எதிரே இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
உடுமலை:

உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கொழுமம் சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. 

இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து அரசு கலைக் கல்லூரி எதிரே இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக, கட்டுமானப்பணிகள் தடைபட்டன. 

தற்போது கட்டிடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. உரிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கட்டுமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் ஜஸ்டின்ஜெபராஜ் கூறுகையில்:

வகுப்பறைகள், ஆய்வகம், தங்கும் விடுதி உள்ளிட்ட கட்டுமானங்கள் நடந்து வருகின்றன. ஒரு மாத காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மாற்றப்பட்டால், கிராமப்புற மாணவர்கள் மிகவும் பயனடைவர் என்றார்.
Tags:    

Similar News