செய்திகள்
கோப்புபடம்

விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை - நாளை நடக்கிறது

Published On 2021-09-13 08:47 GMT   |   Update On 2021-09-13 08:47 GMT
நாளைய பேச்சுவார்த்தையில், இழுபறியில் உள்ள கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? என விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
திருப்பூர்;

திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் கூலி உயர்வை வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்களுடன் இதுவரை மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் தீர்வு எட்டப்படவில்லை.

கூலி உயர்வு அமல்படுத்தப்படாவிட்டால் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என திருப்பூர், கோவை  மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டு கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டது.

கூலி உயர்வை அமல்படுத்த கோரி கோவை தொழிலாளர் நலத்துறை இணை ஆணையரிடம் விசைத்தறியாளர்கள் முறையிட்டனர். 

இந்தநிலையில் நாளை (14-ந்தேதி) இணைஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

நாளைய பேச்சுவார்த்தையில், இழுபறியில் உள்ள கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? என விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Tags:    

Similar News