செய்திகள்
வாலிபருக்கு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் இழப்பீடு தொகைக்கான காசோலையை வழங்கிய காட்சி.

லோக் அதாலத் மூலம் ரூ.1 கோடி இழப்பீடு தொகை

Published On 2021-09-11 08:58 GMT   |   Update On 2021-09-11 08:58 GMT
கடந்த 2017-ம் ஆண்டு இரு சக்கரவாகனமும், பொக்லைன் எந்திரமும் மோதி கொண்டதில் அரவிந்த் என்ற வாலிபர் கை, கால்கள் செயல் இழந்து வாய் பேச முடியாமல் பாதிக்கப்பட்டார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் தலைமையில் லோக் அதாலத் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதன் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

அந்தவகையில் கடந்த 2017-ம் ஆண்டு இரு சக்கரவாகனமும், பொக்லைன்  எந்திரமும் மோதி கொண்டதில் அரவிந்த் என்ற வாலிபர் கை, கால்கள் செயல் இழந்து வாய் பேச முடியாமல் பாதிக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று லோக் அதாலத் மூலம் சமரச தீர்வு காணப்பட்டது. அதன்படி அரவிந்திற்கு இன்சூரன்ஸ் மூலம் ரூ.47 லட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
 
இதேபோல் திருப்பூரை சேர்ந்த விஜயகார்த்திக் என்ற போலீஸ்காரர் சென்னையில் பணியாற்றி வந்த போது ஏற்பட்ட விபத்தில் பலியானார். இந்த வழக்கிற்கும் சமரச தீர்வு காணப்பட்டு விஜயகார்த்திக் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.60 லட்சம் வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை விஜயகார்த்திக் குடும்பத்தினரிடம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் வழங்கினார். லோக் அதாலத் மூலம் சமரச தீர்வு காணப்பட்டு இன்று மொத்தம் ரூ.1 கோடியே 7 லட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
Tags:    

Similar News