செய்திகள்
மக்காச்சோளம்.

மக்காச்சோள சாகுபடியில் பயிர் மேலாண்மை - வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்

Published On 2021-09-10 08:08 GMT   |   Update On 2021-09-10 08:08 GMT
விதைப்பின் போது ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறி வைத்து அந்துப் பூச்சியை அழித்து விடலாம்.
உடுமலை:

உடுமலை பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி விதைப்பு பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் படைப்புழு தாக்குதல் ஏற்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மேலாண்மை குறித்து 

உடுமலை வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

மக்காச்சோளம் பயிரிடுவதற்குதற்கு 20 நாட்களுக்கு முன் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு நடவு செய்ய வேண்டும். இதன் வாயிலாக படைப்பழுவின் கூட்டுப் புழுவிலிருந்து செயலாற்ற அந்துப் பூச்சிகள் வெளியேறும் அவை முட்டை இட இயலாது. விதைகளை விதை நேர்த்தி செய்யவேண்டும். 

கடையில் வாங்கும் விதைகள் பூஞ்சான கொல்லி விதை நேர்த்தி செய்து இருக்கும். படைப்புழுவை கட்டுப்படுத்த சயான்டிரில்புரோல் 19.8 எப்.எஸ். மற்றும் தயோ மீத்தாக்சோம் 9.8எப்.எஸ். ஆகிய கூட்டு மருந்தை ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். வரப்பு பயிராக 3 வரிசை தட்டை உளுந்து பச்சைப்பயிறு சோளம் பயிர் விதைக்க வேண்டும். 

களைக்கொல்லி தெளிக்கும் போது இப்பயிர்களில் படக்கூடாது. விதைப்பின் போது ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறி வைத்து அந்துப் பூச்சியை அழித்து விடலாம். இதன் வாயிலாக பொருளாதார சேத நிலையிலிருந்து தப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News