செய்திகள்
சஸ்பெண்டு

பக்தர்களை அனுமதிப்பதில் முறைகேடு- பழனி கோவில் ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம்

Published On 2021-09-09 03:29 GMT   |   Update On 2021-09-09 03:29 GMT
ரெயில் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களான பாலமுருகன், லோகநாதன் ஆகியோர் பக்தர்களை மின் இழுவை ரெயிலில் பயணிக்க அனுமதிப்பதில் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது.
பழனி:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலுக்கு விரைந்து செல்ல வசதியாக மின் இழுவை ரெயில் மற்றும் ரோப் கார் ஆகியவை கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

இதில், பழனி மேற்கு கிரிவீதியில் மின்இழுவை ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்புவதற்காக ஒப்பந்த அடிப்படையில் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மின் இழுவை ரெயில் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களான பாலமுருகன், லோகநாதன் ஆகியோர் பக்தர்களை மின் இழுவை ரெயிலில் பயணிக்க அனுமதிப்பதில் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது.

இதையடுத்து பாலமுருகன், லோகநாதன் மற்றும் அவர்களை மேற்பார்வையிடும் சம்பத் ஆகியோரை கோவில் நிர்வாகம் அதிரடியாக பணி நீக்கம் செய்தது.


Tags:    

Similar News