செய்திகள்
நிலக்கடலைகளை பறிக்கும் எந்திரம்.

நிலக்கடலையை பறிக்க எந்திரம்

Published On 2021-09-07 07:33 GMT   |   Update On 2021-09-07 07:33 GMT
விவசாய தொழிலாளர் பற்றாக்குறையால் எந்திரம் மூலம் நிலக்கடலை பறிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.
அவினாசி:

அவிநாசி, சேவூர் உள்ளிட்ட இடங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்  நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அவற்றை பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாய தொழிலாளர் பற்றாக்குறையால் எந்திரம் மூலம் நிலக்கடலை பறிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். சேவூர், கிளாகுளம் பகுதியில் எந்திரம் மூலம் நிலக்கடலை பறிக்கும் பணி நடக்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது பரவலாக மழை பெய்திருப்பதால் நிலக்கடலை செடியை எளிதாக பிடுங்க முடிகிறது. செடியை எந்திரத்தினுள் செலுத்தும் போது நிலக்கடலை தனியாகவும், செடி தனியாகவும் பிரிக்கப்படுகிறது. பிரித்தெடுக்கப்படும் செடியை நன்கு காய வைத்து ஆடுகளுக்கு தீவனமாக பயன்படுத்துவோம் என்றனர்.
Tags:    

Similar News