செய்திகள்
கோப்புபடம்

பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கனிவாக நடக்க கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தல்

Published On 2021-09-02 07:09 GMT   |   Update On 2021-09-02 07:09 GMT
சீருடை அல்லது பள்ளி மற்றும் கல்லூரியில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
உடுமலை:

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில், 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையொட்டி கட்டணமில்லா பஸ்பாஸ் வழங்கும் வரை அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் இலவசமாக பயணிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.

சீருடை அல்லது பள்ளி மற்றும் கல்லூரியில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டக்டரிடம் காண்பிக்க வேண்டும். ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மட்டுமே நடந்துள்ள நிலையில் அவர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக உடுமலை கிளை மேலாளர் மணிகண்டன் கூறுகையில்;

பஸ்சில் சீருடையுடன் பயணிக்கும் மாணவ, மாணவிகளிடம் எக்காரணம் கொண்டும் கடிந்து கொள்ளக்கூடாது. சீருடை மற்றும் அடையாள அட்டை இல்லாதிருந்தால் அவர்களிடம் கனிவான அணுகு முறையும், தேவையான வழிநடத்தலும் அவசியம் என கண்டக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
Tags:    

Similar News