செய்திகள்
பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி.

வெள்ளகோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் பகுதிநேர ரேஷன் கடை கட்டிடம்-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்

Published On 2021-09-01 08:52 GMT   |   Update On 2021-09-01 08:52 GMT
அகலரப்பாளையம்புதூர்,ஆதிதிராவிடர் காலனி,சேரன் நகர்,பரப்பு மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 250 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடை அமைக்கப்பட்டு உள்ளது.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் 12 முழு நேர ரேஷன் கடைகள், 1 பகுதி நேர ரேஷன் கடை 1 மண்எண்ணை வழங்கும் கடை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அகலரப்பாளையம்புதூர், ஆதிதிராவிடர் காலனி, சேரன் நகர், பரப்பு மேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 250 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் வெள்ளகோவில் அருகே உள்ள அகலரப்பாளையம் புதூரில் ரூ.6 லட்சம் செலவில் பகுதிநேர நியாயவிலை கடை கட்டிடம் கட்டப்பட்டது. 

அதனை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். தொடர்ந்து நியாய விலை பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
Tags:    

Similar News