செய்திகள்
கோப்புபடம்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உடுமலை கச்சேரி வீதியில் வாகனங்களை நிறுத்த தடை

Published On 2021-08-30 08:05 GMT   |   Update On 2021-08-30 08:05 GMT
கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்களது வாகனங்களை சாலைபகுதியிலேயே நிறுத்தி விட்டு தங்களது பணிகளை பார்க்க சென்று விடுகின்றனர்.
உடுமலை:

உடுமலை கச்சேரி வீதியில் தாலுகா அலுவலகம், கோர்ட்டுகள், பொது இ-சேவை மையம், சார்பதிவாளர் அலுவலகம், தபால் அலுவலகம், மருத்துவமனை, வங்கிகள் மற்றும் தனியார் அலுவலகங்கள், கடைகள் ஆகியவை உள்ளன. இதனால் இந்த வீதியில் பகலில் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். 

இந்த வழியாகத்தான் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் சென்று வரும். கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்களது வாகனங்களை சாலை பகுதியிலேயே நிறுத்தி விட்டு தங்களது பணிகளை பார்க்க சென்று விடுகின்றனர். 

இதன் காரணமாக அந்த சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த வீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி தாலுகா அலுவலகத்திற்கு முன்பு உள்ள காலி இடத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும், அருகில் உள்ள குட்டைத்திடலில் கார்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வீதியில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படாமல் தடுத்து அவற்றை பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தி விட்டு வரும்படி எடுத்துரைக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் 2 போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கார்கள் குட்டைத்திடலில் நிறுத்தப்பட்டு வருகின்றன.
Tags:    

Similar News