செய்திகள்
க்ரைம்.

நூதன முறையில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் கும்பல் - போலீசில் புகார்

Published On 2021-08-30 07:47 GMT   |   Update On 2021-08-30 11:39 GMT
வேலை முடிந்ததும் இத்தனை பேர் வேலை செய்துள்ளோம். அதற்கு ஒரு லட்சம் சம்பளம் தர வேண்டும் என அந்த கும்பல் விவசாயிகளை மிரட்டுகின்றனர்.
திருப்பூர்:

பல்லடம் பகுதி கிராமங்களில் கிணறுகளை சுத்தம் செய்து தருவதாக கூறி  கும்பல் ஒன்று மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து கரைப்புதூர் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர்.

விவசாயிகள் கூறுகையில், 

பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் இருந்து வரும் கும்பல் ஒன்று குழந்தைகளுக்கு உணவு வாங்கக்கூட காசு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம் என்று விவசாயிகளிடம் கூறுகின்றனர். கொரோனா காலம் என்பதால் வருவாய் இல்லை, கிணறு, தொட்டி ஏதாவது இருந்தால் சுத்தம் செய்யும் வேலையை கொடுங்கள். அதற்காக, ஆயிரம் அல்லது 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும் என்கின்றனர்.

வேலை முடிந்ததும் இத்தனை பேர் வேலை செய்துள்ளோம். அதற்கு ஒரு லட்சம் சம்பளம் தர வேண்டும். இல்லையெனில் பெண்களை கையை பிடித்து இழுத்ததாக போலீசில் புகார் அளிப்போம் என மிரட்டுகின்றனர். இந்த கும்பலில் உள்ள யாரிடமும் ரேஷன் கார்டு, ஆதார் உள்ளிட்ட எந்தவித ஆவணங்களும் இல்லை. இதுபோன்ற மோசடி கும்பலிடம் விவசாயிகள் யாரும் ஏமாந்து விடக்கூடாது. எனவே, நூதன முறையில் மோசடி செய்து வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு  விவசாயிகள் கூறினர்.
Tags:    

Similar News