செய்திகள்
அபராதம்

நன்னிலம் பகுதிகளில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைக்காரர்களுக்கு அபராதம்

Published On 2021-08-29 11:54 GMT   |   Update On 2021-08-29 11:54 GMT
நன்னிலம் கடைவீதியில் பேரூராட்சி சார்பில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறிய வணிகர்களுக்கு ரூ. 200 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
நன்னிலம்:

தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி நன்னிலம் கடைவீதியில் பேரூராட்சி சார்பில் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மற்றும் கொரோனா விதிமுறைகளை மீறிய வணிகர்களுக்கு ரூ. 200 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தநிலையில் நன்னிலம் கடைத்தெருவில் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா விதிமுறைகளை மீறிய கடைக்காரருக்கு அபராதம் விதித்தார். இதேபோல் நன்னிலம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் விதிமுறைகளை மீறிய 25 கடைக்காரர்களுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News