செய்திகள்
மீட்கப்பட்ட மான்.

நாய் விரட்டியதில் புதருக்குள் விழுந்த மான் மீட்பு

Published On 2021-08-22 11:33 GMT   |   Update On 2021-08-22 11:33 GMT
அவினாசி பகுதியில் தண்ணீருக்காக மான்கள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
அவிநாசி:

அவிநாசி அருகே தெக்கலூர் குடியிருப்புப்பகுதிக்குள் உணவு தேடி வந்த 2 வயதுள்ள ஆண் மானை தெரு நாய்கள் விரட்டின. மிரண்டு ஓடிய மான் மயங்கிய நிலையில் அங்குள்ள புதரில் விழுந்தது. 

இதுகுறித்து  தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் மானை மீட்டு தெக்கலூர்  கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கால்நடை டாக்டர் மானுக்கு சிகிச்சை அளித்தார். மயங்கிய நிலையில் இருந்த மானுக்கு ஊட்டச்சத்து நீர் வழங்கப்பட்டது.  

அடுத்த இரண்டு மணி நேரத்தில் மான் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் அதன் வாழ்விடத்தில் மான் கொண்டு சென்று விடப்பட்டது. அவினாசி பகுதியில் தண்ணீருக்காக மான்கள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. 

எனவே மான்கள் வெளியே வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை  வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News