செய்திகள்
கயிறு கட்டி சுப்பிரமணியனை மீட்கும் தீயணைப்பு வீரர்கள்.

கிணற்றில் இறங்கி வெளியே வர முடியாமல் தவித்த விவசாயி-தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

Published On 2021-08-18 10:30 GMT   |   Update On 2021-08-18 10:30 GMT
விளை நிலங்களிலேயே கிணறு அமைத்து விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர்.
மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. பெரும்பாலானோர் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்கின்றனர். இதற்கு கிணற்று நீர் பாசனம் முக்கிய நீராதாரமாக உள்ளது. தங்களது விளை நிலங்களிலேயே கிணறு அமைத்து பாசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மடத்துக்குளம் அருகே உள்ள சின்னப்பன் புதூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டார் அமைத்துள்ளார். ஆனால் மின்மோட்டார் பழுதால் தண்ணீர் வரவில்லை.

இதையடுத்து மின்மோட்டாரை சரி செய்ய 100 அடி ஆழமுள்ள கிணற்றில் சுப்பிரமணியன் இறங்கினார். பின்னர் கிணற்றில் இருந்து சுப்பிரமணியனால் வெளியே வர  முடியவில்லை.

உடனே உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுப்பிரமணியனை பத்திரமாக மீட்டனர். 
Tags:    

Similar News