செய்திகள்
மரணம்

ஓமலூர் அருகே தடுப்பணையில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி

Published On 2021-08-15 10:10 GMT   |   Update On 2021-08-15 10:10 GMT
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தடுப்பணையில் குளித்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஓமலூர்:

சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சுபாஷ் (வயது 18). இவரும் அதே பகுதியை சேர்ந்த தீரஜ் மகன் பாரூக் (18), ஜெகதீஸ் மகன் பரணி (18), ஓமலூர் அருகே உள்ள செங்கரடு பகுதியை சேர்ந்த செல்வம் மகன் கவுதம் (17) ஆகியோரும் குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர் கவுதம் சேலம் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட்டில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு தனது நண்பர்களை பார்த்து அனைவரும் ஓமலூர் அருகே உள்ள சக்கரை செட்டியப்பட்டி வனப்பகுதியில் உள்ள தடுப்பணையில் நீச்சல் கற்பதற்காக வந்துள்ளனர். அப்போது சுபாஷ் தடுப்பணையில் உள்ள தண்ணீரில் இறங்கியபோது ஆழமான பகுதி என்பதால் தண்ணீரில் மூழ்கினார்.

உடனடியாக மற்றவர்கள் அனைவரும் சத்தம் போட அருகே இருந்தவர்கள் கல்லூரி மாணவன் சுபாசை தேடினர். நீண்ட நேர தேடலுக்குப் பிறகு குட்டையில் சுபாஷ் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து ஓமலூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News