செய்திகள்
தலைமைச் செயலகம்

தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது

Published On 2021-08-14 01:17 GMT   |   Update On 2021-08-14 01:17 GMT
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் வேளாண் பட்ஜெட் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன.
சென்னை:

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனால் சட்டசபையில் நேற்று 2021-2022-ம் ஆண்டுக்கான திருத்த நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த முறை பட்ஜெட்டில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டிருந்தது. அதாவது, காகிதமில்லா சட்டசபை என்பதை நடைமுறைப் படுத்தும் வகையில், உறுப்பினர்களுக்கு புத்தகமாக பட்ஜெட் பிரதியை வழங்காமல், கம்ப்யூட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

பொது பட்ஜெட்டைப் போலவே  வேளாண்மைத் துறை பட்ஜெட்டிலும் பல முக்கிய தகவல்கள், அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக வேளாண்மைத் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News