செய்திகள்
ரேஷன் கடையில் தாசில்தார் ஆய்வு செய்த காட்சி.

ரேசன் கடைகளில் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு-முறைகேடு கண்டுபிடிப்பு

Published On 2021-08-11 08:06 GMT   |   Update On 2021-08-11 08:06 GMT
ரேஷன் பொருட்கள் கணக்கில் இருப்பதை விட குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூரில் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாகவும், உரிய முறையில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை எனவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனையடுத்து பறக்கும் படை தாசில்தார் சுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் திருப்பூரில் உள்ள ரேஷன்கடைகளில் தீடிரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது திருப்பூர் கே.வி.ஆர் நகரில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்த போது கடையில் அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகிய பொருட்கள் கணக்கில் இருப்பதை விட குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடையின் விற்பனையாளர்களுக்கு ரூ.2,375 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் பல்லடம் மற்றும் அருள்புரம் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளிலும் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 
Tags:    

Similar News