செய்திகள்
கோப்புபடம்

பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வருகை-மாணவர்களுக்கு இலவச பாடபுத்தகங்கள் வழங்கும் பணிகள் தீவிரம்

Published On 2021-08-04 07:16 GMT   |   Update On 2021-08-04 11:05 GMT
மாற்றுத்திறனாளிகள், நோய் பாதிப்பில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வருவதால் அவர்கள் பள்ளிக்கு வர விலக்கும் அளிக்கப்படுகிறது
உடுமலை:

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. அதேநேரம்  கடந்த ஜூன் மாதம் மாணவர் சேர்க்கைக்காக தலைமையாசிரியர்களும், அவர்களுக்கு உதவியாக அலுவலக பணியாளர்களும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டது.

அதேநேரம் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்துதல் மற்றும் அவற்றை உறுதி செய்தல், பாடங்களைத் தயாரித்தல் ஆகிய பணிக்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தனர்.

இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி அனைத்து ஆசிரியர்கள் தினமும் பணிக்கு வர பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

அவ்வகையில் உடுமலை கல்வி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் நேரடியாக பள்ளிக்கு வருகை புரிந்தனர். 

இதனை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் உறுதி செய்து வருகின்றனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், அனைத்து பாட ஆசிரியர்களும், பள்ளிக்கு வருகை புரிகின்றனர். 

அவர்கள் கால அட்டவணை தயாரித்தல், இலவச பாடப்புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள், நோய் பாதிப்பில் உள்ளவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து வருவதால் அவர்கள் பள்ளிக்கு வர விலக்கும் அளிக்கப்படுகிறது என்றனர்.
Tags:    

Similar News