செய்திகள்
கோப்புபடம்.

மாணவர்கள் நன்றாக படிக்கிறார்களா..? வீடுகளுக்கே சென்று ஆசிரியர்கள் ஆய்வு

Published On 2021-07-31 08:49 GMT   |   Update On 2021-07-31 08:49 GMT
சில மாணவர்களுக்கு நேரில் நடத்தினால் தான் புரிகிறது என்பது தெளிவாகிறது. அவர்களுக்கு நேரம் ஒதுக்கி தனிப்பட்ட முறையில் ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களின் கல்வி சூழலை ஆசிரியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுதேடி படையெடுக்க தொடங்கி விட்டனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு விட்டன. கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாட வகுப்புகள் குறித்த அட்டவணை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. ‘டி.வி.,’ இல்லாதவர்களுக்கு  ரேடியோ மூலமாக பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 

இந்த இக்கட்டான சூழலிலும் கல்வி பாதிக்காத வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் இதை சரிவர பயன்படுத்துகிறார்களா என்பதை அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு.

பெற்றோர்கள் இருக்கும்போது மாணவர்களின் வீடுகளுக்கு செல்கிறோம்.
அப்போதே மாணவர்களின் நடவடிக்கைகளை கேட்டறிய முடியும். மாணவர்கள் தங்களுக்கான சந்தேகங்களை கேட்டறிந்து கொள்கின்றனர். இரவு நேரங்களிலும் சில நாட்கள் செல்வதுண்டு. 

சில மாணவர்களுக்கு நேரில் நடத்தினால்தான் புரிகிறது என்பது தெளிவாகிறது. அவர்களுக்கு நேரம் ஒதுக்கி தனிப்பட்ட முறையில் கற்பிக்கிறோம். 

கடந்தாண்டு பள்ளியில் படித்து அடுத்த வகுப்பிற்கு செல்வதில் ஆர்வம் காட்டாதவர்களும் உள்ளனர். அவர்களிடம் காரணத்தை கேட்டறிந்து இடைநிற்றலை தவிர்க்க வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்
Tags:    

Similar News