செய்திகள்
கோப்புபடம்

கொங்கு மெயின் சாலை சீரமைப்பு-வியாபாரிகள் வலியுறுத்தல்

Published On 2021-07-24 10:12 GMT   |   Update On 2021-07-24 10:12 GMT
கடந்த ஓராண்டுக்கும் மேல் கொரோனா பரவல் காரணமாக வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
திருப்பூர்:

கொங்கு மெயின் ரோடு சாலை சீரமைப்பு பணியை விரைவாக முடிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட கொங்கு மண்டல வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் மாரியப்பன், பொருளாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி கமிஷனர் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஓராண்டுக்கும் மேல் கொரோனா பரவல் காரணமாக வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட கொங்கு மெயின் ரோடு பகுதியில் சாலைப்பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக மந்த நிலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் கடைகள் திறக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் வந்து செல்ல வழியின்றி வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் நிலைமையை கருதி சாலை பணியை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டுக்கு வழி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News