செய்திகள்
கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வண்ண ஓவியங்களுடன் குழந்தைகள் வார்டு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க வண்ண ஓவியங்களுடன் குழந்தைகள் வார்டு தயார்

Published On 2021-07-22 03:37 GMT   |   Update On 2021-07-22 03:37 GMT
கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி:

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுக்க முழுக்க கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு அதிகளவு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அவர்களுக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டும் தயாராகி உள்ளது.

அந்த வார்டில் குழந்தைகள் பார்த்து ரசித்து மகிழும் வகையில் கார்ட்டூன் பொம்மைகள், குழந்தைகள் விரும்பும் விலங்குகளை ஓவியமாக வரைந்து உள்ளனர். தனியார் அறக்கட்டளை மற்றும் ஓவியர்கள் அமைப்பு இணைந்து இந்த ஓவியங்களை வரைந்து உள்ளனர்.

ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தேவைப்படும் குழந்தை களுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்லும் குழாய்கள் வெளியே தெரியாத வண்ணம் இந்த ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. 3-வது அலை குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் ஆபத்து உள்ளதாக கூறப்படுவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக இந்த வார்டு உருவாக்கப்பட்டு உள்ளது.


Tags:    

Similar News