செய்திகள்
விஜய் வசந்தின் ட்விட்டர் பதிவு

குமரி சுற்றுலா தலங்களை ஊக்குவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்

Published On 2021-07-21 17:24 GMT   |   Update On 2021-07-21 17:24 GMT
குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்கள் குறித்து அவற்றின் புகைப்படங்களுடன் விஜய் வசந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அந்த இடங்களை வந்து ரசிப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை ஊக்குவித்து சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் வகையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை போட்டு வருகிறார்.



குமரி மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்கள் குறித்து அவற்றின் புகைப்படங்களுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அந்த அருமையான இடங்களை வந்து ரசிப்பதற்காக அவர் அழைப்பு விடுக்கிறார். கொரோனாவால் பாதிப்படைந்த கன்னியாகுமரியின் சுற்றுலாத்துறை இந்த முயற்சிகள் மூலமாக மீண்டும் புத்துயிர் பெறும் என்று நம்புவோம்.
Tags:    

Similar News