செய்திகள்
பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரிப்பு.

உடுமலை பகுதியில் பாலித்தீன் பைகள் பயன்பாடு அதிகரிப்பு

Published On 2021-07-16 07:26 GMT   |   Update On 2021-07-16 07:26 GMT
பிளாஸ்டிக் தடை தொடங்கியபோது கடைகளில் பாலித்தீன் பைகள் கிடைக்காமல் இருந்தது.
உடுமலை:

பிளாஸ்டிக் தடை தொடங்கியபோது கடைகளில் பாலித்தீன் பைகள் கிடைக்காமல் இருந்தது.ஒருமுறை பயன்படுத்தி வீசியெறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும் பயன்படுத்தவும் தடை உள்ளது. இதற்கென பிளாஸ்டிக் பயன்பாட்டைக்குறைக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளால்  கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வந்தது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் துணிப்பைகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்தன. ஆனால்,கொரோனா பரவல் காரணமாக துறை ரீதியான அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கவனம் நோய்த்தடுப்பிற்கு மாறியுள்ளது. இதனை சாதகமாக்கிக்கொண்ட வியாபாரிகள் பலர் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-

பிளாஸ்டிக் தடை தொடங்கியபோது கடைகளில் பாலித்தீன் பைகள் கிடைக்காமல் இருந்தது. அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து பயன்படுத்துவதைத் தவிர்த்திருந்தனர்.சமீபகாலமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு மீண்டும் காணப்படுகிறது.

சாலையோர பூ,பழம் வியாபாரிகள், உணவகங்கள்,துணிக்கடைகள், டீக்கடைகள் ஆகியவற்றில் பாலித்தீன் பைகள், டீ கப்புகள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளன. அதிகாரிகள் பெயரளவில் ஆய்வு நடத்துவதை தவிர்த்து முறையாக தொடர் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News