செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்க வேண்டுகோள்

Published On 2021-07-14 10:08 GMT   |   Update On 2021-07-14 10:08 GMT
கொரோனா தொற்றின் போது கோவையை தான் நாட வேண்டிய நிலை இருந்தது.
திருப்பூர்:

திருப்பூரில் இ.எஸ்.ஐ.மருத்துவமனை அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் பனியன் தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பில் தமிழக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் இ.எஸ்.ஐ., திட்ட இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

பல்லாயிரம் கோடி பனியன் வர்த்தகம் நடக்கிறது. இவர்களுக்கான இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டும் பணி நீண்ட காலமாக துவங்காமல் உள்ளது. கொரோனா தொற்றின் போது கோவையை தான் நாட வேண்டிய நிலை இருந்தது. தற்போது 3வது அலை தொற்று பரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

எனவே திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை 500 படுக்கை வசதியுடன் நவீன கருவிகளுடன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News