செய்திகள்
தடுப்பூசி.

24 நாளில் 24ஆயிரம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி

Published On 2021-07-13 09:13 GMT   |   Update On 2021-07-13 09:13 GMT
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர்:

கொரோனாவை முழுமையாக ஒழித்து, தொற்று இல்லாத திருப்பூரை உருவாக்குவதற்காகவும், தடையில்லாத தொழில் வளர்ச்சியை உறுதி செய்வதற்காகவும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில் தொழிலாளருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் கடந்த ஜூன் 14-ந் தேதி முதல் பின்னலாடை உட்பட பல்வேறுவகை நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நிறுவனங்கள் தனியார் மருத்துவமனையிடம் இருந்து பணம் செலுத்தி பெற்று தொழிலாளருக்கு இலவசமாக ஊசி போடப்படுகிறது.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஜூன் 14-ந்தேதி முதல் கடந்த 10-ந் தேதி வரை 24 நாட்களில் மொத்தம் 23,984 பேருக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சி.ஐ.ஐ., மாவட்ட கவுன்சில் தலைவர் திருக்குமரன் மற்றும் முன்னாள் தலைவர் வெங்கடேஷ் கூறியதாவது:-
ஊரடங்கு தளர்த்தப்பட்டு நிறுவனங்கள் கூடுதல் தொழிலாளருடன் இயங்க அரசு அனுமதித்துள்ளது. 

விரைந்து தடுப்பூசி செலுத்தி தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்வது கட்டாயமாகிறது.சி.ஐ.ஐ., இணைந்து செயல்படுத்தி வரும் திட்டத்தில் கடந்த 24 நாட்களில் திருப்பூரில் 23 ஆயிரத்து 984 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தற்போது உள்ளூர் மருத்துவமனைகளும் தடுப்பூசி வழங்க முன்வந்துள்ளன. சீரான விலைக்கு தடுப்பூசி வழங்கும் மருத்துவமனைகளுடன் கரம்கோர்த்து, தொழிலாளருக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்.
Tags:    

Similar News