செய்திகள்
அமைச்சர் சுப்பிரமணியன்

ஜிகா வைரஸ்க்கு அரசின் நடவடிக்கை என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

Published On 2021-07-11 03:27 GMT   |   Update On 2021-07-11 03:27 GMT
கடந்த 2 நாட்களாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் ஜிகா வைரஸ் சம்பந்தமாக ஆய்வு மற்றும் விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
மதுரை:

தென் மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டங்களை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மதுரை விமான நிலையம் வந்தார். 

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜிகா வைரஸ் என்பது டெங்குவின் ஒரு வகையான வைரஸ். கடந்த 2 நாட்களாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் இது சம்பந்தமாக ஆய்வு மற்றும் விழிப்புணர்வுகளை செய்து வருகின்றனர். 



இந்த ஜிகா வைரஸ் பரப்பும் கொசு நல்ல தண்ணீரில் உருவாகும். பகல் நேரங்களில் கடிக்க கூடியது என்பதால் வீடுகளில் சுற்றி உள்ள நீர் தேங்காத வண்ணம் இருக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News