செய்திகள்
நேதாஜி விளையாட்டு மைதானம்.

உடுமலையில் புதர் மண்டி கிடக்கும் விளையாட்டு மைதானம்

Published On 2021-07-10 08:43 GMT   |   Update On 2021-07-10 08:43 GMT
சிறுவர், சிறுமியர்களுக்காக பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை நகரின் மத்தியில் 6.30 ஏக்கர் பரப்பில் நேதாஜி விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு  காலை, மாலையில், மக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். 

இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், கிரிக்கெட், கால்பந்து விளையாடுகின்றனர். சிறுவர், சிறுமியர்களுக்காக பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

தினமும் மக்கள் பயன்படுத்தும் இந்த விளையாட்டு மைதானம் கொரோனா ஊரடங்கு காரணமாக 3 மாதமாக பூட்டப்பட்டிருந்தது.

ஊரடங்கு தளர்வால் தற்போது மைதானம் திறக்கப்பட்ட நிலையில்  முட் செடிகள், கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. 

எனவே புதரை அகற்றி பராமரிக்க நகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News