செய்திகள்
அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்த காட்சி.

அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட பணிகளை அமைச்சர் ஆய்வு

Published On 2021-07-09 09:14 GMT   |   Update On 2021-07-09 09:14 GMT
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையால் கொரோனா நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், புதியதாக அரசு மருத்துவ  கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் ரூ.336 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. 

கூட்டரங்கு, டாக்டர்கள் மற்றும் பணியாளர் குடியிருப்பு, நிர்வாக அலுவலக கட்டிடம், கல்லூரி முதல்வர் குடியிருப்பு, விளையாட்டு மைதானம், நவீன உடற்பயிற்சி கூடம், மாணவர் விடுதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் வினீத் ஆகியோர் பார்வையிட்டு  ஆய்வு செய்தனர். 

பின்னர் அமைச்சர் கூறுகையில், கொரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட  நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கையால் தற்போது நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.  

தற்போது திருப்பூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏழை ,எளிய நடுத்தர மற்றும் வசதி படைத்தவர்கள் கூட தனியார் மருத்துவமனைக்கு நிகராக உயர்தர சிகிச்சை பெறக்கூடிய வகையில் இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார். 
Tags:    

Similar News