செய்திகள்
கோப்புபடம்

நன்னிலம் பகுதியில் தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

Published On 2021-07-07 10:18 GMT   |   Update On 2021-07-07 10:18 GMT
நன்னிலம் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் கூட்டம் அதிகரித்திருப்பதை காணமுடிகிறது.

நன்னிலம்:

நன்னிலம் பகுதியில் கொரோனாவில் இருந்து காத்து கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வந்தனர்.தடுப்பூசி முகாம்களை தேடி செல்ல ஆரம்பித்தனர்.

தற்போது மூன்றாம் அலை அக்டோபர், நவம்பர் மாதத்தில் வரும் என சில டாக்டர்கள் கூறி வருவதாக தகவல் பரவத் தொடங்கிய நிலையில், பொது மக்கள் தாமாக முன்வந்து, தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருகின்றனர். பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள், கிராம மக்கள் பொது சுகாதாரத் துறையை அணுகி, நாள்தோறும் சிறப்பு முகாம்கள் அமைத்து, தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.

இந்நிலை தொடர்ந்து நீடித்தால், நன்னிலம் பகுதியில் விரைவில், 18 வயது முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் 100 சதவீத இலக்கை எட்டி விடுவார்கள். தற்போது அரசு பொது மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் கூட்டம் அதிகரித்திருப்பதை காணமுடிகிறது.

தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்பட்டன நிலையில், பேருந்துகளில பயணிகளின் கூட்டங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தளர்வு அறிவிக்கப்பட்டதால், பொதுமக்களின் நடமாட்டம் அதிகம் காணப்படும் என எதிர்பார்த்த நிலையில், பொதுமக்கள் வெளியில் வருவோரின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. காலை மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களின் நெரிசல் மட்டுமே இருந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், தங்களின் இருசக்கர வாகனத்தில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News