செய்திகள்
காணிக்கை எண்ணும் பணி

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.8½ லட்சம் காணிக்கை வசூல்

Published On 2021-06-30 02:50 GMT   |   Update On 2021-06-30 02:50 GMT
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்து 930 காணிக்கையாக வசூல் ஆனது.
மலைக்கோட்டை :

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகர், தாயுமானசுவாமி, மட்டுவார் குலழம்மை சன்னதிகளில் உள்ள மொத்தம் 27 உண்டியல்கள் உள்ளன.

இவற்றில் மாணிக்க விநாயகர் சன்னதியில் உள்ள 7 உண்டியல்கள் மட்டும் திறக்கப்பட்டு கோவில் உதவி ஆணையர் விஜயராணி தலைமையில் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்து 930 காணிக்கையாக வசூல் ஆனது.

இந்த பணியில் வெக்காளியம்மன் கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன், மலைக்கோட்டை கோவில் கண்காணிப்பாளர் பிரகாஷ், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் பானுமதி உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News