செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2021-06-23 10:35 GMT   |   Update On 2021-06-23 10:35 GMT
152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 133.90 அடியாக இருந்தது.
கூடலூர்:

தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதியில் முல்லைப்பெரியாறு அணை அமைந்து உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1,725 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து இருந்தது. ஆனால் நேற்று வினாடிக்கு 1054 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது.

152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 133.90 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,867 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Tags:    

Similar News