செய்திகள்
கோப்புப்படம்

சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள்

Published On 2021-06-23 07:12 GMT   |   Update On 2021-06-23 07:12 GMT
திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்கிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது.மாணவர்களுக்கு மதிப்பெண் மற்றும் உயர்கல்வி பயில்வதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பணி நடக்கிறது.இதற்கென தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பள்ளிக்கு வருகை புரிகின்றனர். 

தற்போது மாணவர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள பாட ஆசிரியர்களும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்கிறது. இதனால் ஊரடங்கில் பெருமளவு தளர்வு அறிவிக்கப்பட்ட பின் மாணவர் சேர்க்கை துவங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இருப்பினும் திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் சேர்க்கை நடந்து வருகிறது. குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் அவரவர் விரும்பும் பாடப் பிரிவைத்தேர்ந்தெடுத்து பள்ளிகளில் சேர முனைப்பு காட்டுகின்றனர். 

அதேபோல் தற்போது, பாட ஆசிரியர்களும், சுழற்சிமுறையில் பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.ஊரடங்கில் அதிகப்படியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து சேவை துவக்கப்பட்டால் அவர்கள் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்படும். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News