செய்திகள்
சீமான்

நீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும் - சீமான்

Published On 2021-06-21 21:40 GMT   |   Update On 2021-06-21 21:40 GMT
சட்டசபையில் பேசிய கவர்னர் பன்வாரிலால் புரோகித், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்றார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராகவும், கூட்டாட்சிக்கு எதிராகவும் கொண்டு வரப்பட்ட நீட் எனும் மத்தியத்தர ஒற்றை தகுதித்தேர்வு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் உழைக்கும் ஆதி தமிழ் குடிகளின் பிள்ளைகளை டாக்டராக விடாது தடுக்கிறது. மனுதர்மத்தின் நவீன வடிவான ‘நீட்’ தேர்வை முற்று முழுதாக தமிழக அரசு துடைத்தெறிய வேண்டும்.

மாநில தன்னாட்சியையும், தன்னுரிமையையும் நிலைநாட்ட, மண்ணின் மக்களின் நலவாழ்வை உறுதி செய்ய, டாக்டராகும் பெருங்கனவை வர்க்க வேறுபாடின்றி யாவருக்கும் உறுதி செய்ய ‘நீட்’ எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News