செய்திகள்
தடுப்பூசி

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-06-20 08:10 GMT   |   Update On 2021-06-20 08:10 GMT
இணையதளம் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் தடுப்பூசி போடப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் காந்திநகரில் உள்ள சாய் கிருபா சிறப்பு பள்ளியில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். இதில் சிறப்பு குழந்தைகள், குழந்தைகளின் பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர் என மொத்தம் 80 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் இணைய தளம் மற்றும் கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு  மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் தடுப்பூசி போடப்பட்டது.

மருத்துவர் வசந்தி பிரேமா தலைமையிலான மருத்துவர் குழுவினர் ஆவணங்களை சரி பார்த்து தடுப்பூசி செலுத்தினர். மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார், நகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் முகாமை பார்வையிட்டனர். இதுவரை 150 பேருக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்  சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்த இம்முகாமுக்கு மாற்றுத்திறனாளிகள் நலன் விரும்பும் தேசிய அமைப்பான சக்ஷம் அமைப்பின் பல்லடம் ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார்.

சக்ஷம் தன்னார்வ அமைப்பினர் ஒருங்கிணைத்தனர். முகாமில்  89 மாற்றுத்திறனாளிகள், உதவியாளர்கள் என 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, சக்ஷம் அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News