செய்திகள்
கோப்புப்படம்

கேரம்-செஸ் விளையாடி உற்சாகமடையும் மாணவர்கள்

Published On 2021-06-19 06:56 GMT   |   Update On 2021-06-19 06:56 GMT
கொரோனா பரவல் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் குழு போட்டிகளில் பங்கேற்பது கிடையாது.
திருப்பூர்:

விளையாட்டுக்களினால் குழு ஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை, நட்புணர்வு, உற்சாகம் வளருகிறது.இதற்காகவே பள்ளி மற்றும் கல்லூரி  அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.ஆனால் கொரோனா பரவல் காரணமாக  பள்ளி மற்றும் கல்லூரி இயங்காமல் உள்ளது. 

ஊரடங்கு நிபந்தனையால் போட்டிகள் நடத்தப்படுவதில்லை.இதனால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் சமீபகாலமாக உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் அவரவர் குடியிருப்பு வீடுகளில் ஒன்று கூடும் மாணவர்கள் பாதுகாப்புடன் கேரம், செஸ் உள்ளிட்ட போட்டிகள் வாயிலாக தங்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து பள்ளி மாணவர்கள் கூறியதாவது:-

கொரோனா பரவல் காரணமாக சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் குழு போட்டிகளில் பங்கேற்பது கிடையாது.அதேநேரம் குடியிருப்பு வீடுகளில் ஒன்றுகூடும் நண்பர்கள், அவரவர் குடும்பத்தாரின் தற்போதைய உடல் நிலை விவரத்தை முழுமையாக அறிந்து அதன் பின்னரே விளையாட்டு போட்டியில் ஈடுபடுகிறோம்.வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் எங்களுக்கு இது சற்று ஆறுதலை தருகிறது என்றனர்.
Tags:    

Similar News