செய்திகள்
கோப்புப்படம்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 2 பெண்கள் உள்பட மேலும் 6 பேர் பலி

Published On 2021-06-16 08:07 GMT   |   Update On 2021-06-16 08:07 GMT
சேலம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1296 ஆக அதிகரித்துள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

நேற்று முன்தினம் 796 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 759 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சேலம் மாநகராட்சியில் மட்டும் 135 பேர் அடங்குவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 912 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 1879 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். நேற்று பகலில் சேலத்தை சேர்ந்த 7 பெண்கள் உள்பட 24 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

தொடர்ந்து 6 ஆயிரத்து 780 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சேலம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1296 ஆக அதிகரித்துள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்க்கு சேலம் மாவட்டத்தில் நேற்று 15 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் 166 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும் 57 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News