செய்திகள்
கோப்புப்படம்

நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை சரிவு

Published On 2021-06-16 06:46 GMT   |   Update On 2021-06-16 06:49 GMT
ஊரடங்கு தளர்வு காரணமாக பொதுமக்கள் நேரிடையாக மார்க்கெட்டுகளுக்கே சென்று காய்கறிகள் வாங்குகின்றனர்.
திருப்பூர்:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மே மாதம்  24-ந்தேதி முதல் கடந்த 7-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தளர்வுகளுடன்  அமலில் உள்ளது. 

ஊரடங்கு தொடங்கியதும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.அதன்படி காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கே நேரிடையாக சென்று விற்பனை செய்ய வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.வியாபாரிகள் லோடு ஆட்டோக்களில் காய்கறிகளை  விற்பனைக்கு எடுத்து சென்றனர். பொதுமக்களும் வீடுகள் முன்பு வந்த காய்கறிகளை வாங்கினர்.

தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக பொதுமக்கள் நேரிடையாக மார்க்கெட்டுகளுக்கே சென்று காய்கறிகள் வாங்குகின்றனர். இதனால் நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனை குறைந்துள்ளது. 

திருப்பூரில் 185 நடமாடும் காய்கறி வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் மூலம் ஒரு நாளில் 500 டன் காய்கறி வரை விற்பனையானது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக நடமாடும் வாகன எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்து விட்டது. இதன் மூலம் 200 டன்னுக்கு குறைவான காய்கறியே விற்கப்படுகிறது.

பொதுமக்கள் மார்க்கெட்டுகளுக்கு நேரிடையாக சென்று காய்கறிகளை வாங்குவதால் தொற்று பரவலுக்கு வழிவகுத்து விடும்.எனவே நடமாடும் வாகனங்களில் காய்கறிகளை வாங்க வேண்டுமென அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News