செய்திகள்
கோப்புபடம்

டாஸ்மாக் கடைகள் திறப்பதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-06-14 13:45 GMT   |   Update On 2021-06-14 13:45 GMT
கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதை கண்டித்து பா.ஜ.க.வினர் அவரவர் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:

கொரோனா ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை கண்டித்தும், கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களை முறையாக கணக்கெடுப்பு நடத்தி அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கக்கோரியும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க.வினர் அவரவர் வீடுகள் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மதிகோன்பாளையத்தில் பா.ஜ.க. மாநில செயலாளர் பாஸ்கர் தனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் கட்சி நிர்வாகிகள் சந்தோஷ்குமார், வசந்த், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோன்று தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் அனந்தகிருஷ்ணன் தர்மபுரி பிடமனேரி ரோட்டில் உள்ள தனது வீட்டின் முன்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கட்ராஜ், மாவட்ட செயலாளர் நாகராஜ், நகர தலைவர் ஜிம்சக்திவேல், மருத்துவஅணி செயலாளர் டாக்டர் சுப்பிரமணி, நகர பொதுச் செயலாளர் வெங்கடேஷ், நகர செயலாளர் தேவராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு டாஸ்மாக் கடைகளை திறப்பதை கண்டித்து கோஷங்கள்எழுப்பினர்.

இதேபோன்று பென்னாகரம் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பென்னாகரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மேற்கு ஒன்றிய தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாநில பொது குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட மருத்துவர் அணி நிர்வாகி பீனு, கல்வியாளர் பிரிவு பிரணவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியுடன் கோஷங்கள் எழுப்பினர்.

அரூரில் நகர தலைவர் செந்தில்குமார் தலைமையிலும், காரிமங்கலத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் கலைச்செல்வன் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் குமரவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரவர் வீடுகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதேபோன்று பாலக்கோட்டில் பா.ஜ.க. அலுவலகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களது வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர தலைவர் சிவா, துணை தலைவர் ராமரு, விவசாய அணி நிர்வாகி பழனி, சக்திவேல் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News