செய்திகள்
கைது

காய்கறி வாகனத்தில் கடத்தி வந்த 1600 மது பாட்டில்கள் பறிமுதல்- 3 பேர் கைது

Published On 2021-06-05 10:40 GMT   |   Update On 2021-06-05 10:40 GMT
கும்பகோணத்தில் காய்கறி வாகனத்தில் கடத்தி வந்த 1600 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
பட்டீஸ்வரம்: 

தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் காய்கறி வாகனத்தில் மது கடத்தி வந்து அதை விற்று வருவதாக தொடர்ந்து வந்த புகாரின் பேரில் எஸ்.பி. தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவுபடி கும்பகோணம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன் தலைமையில், நேற்று மாலை கும்பகோணம் புறவழிச் சாலையில் தனிப்படை போலீசார் ராஜா, செல்வகுமார், ஜம்புலிங்கம், சண்முகசுந்தரம், பிநீ சுரேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த காய்கறி ஏற்றி வந்த லாரி ஒன்று நிற்காமல் சென்றதால் அதை விரட்டி பிடித்த தனிப்படை போலீசார் சோதனை செய்தார்கள். அதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள 1600 கர்நாடகா மாநில மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

உடனே அந்த வாகனம் மற்றும்  மதுபாட்டில்களை பறிமுதல் செய்து கடத்தி வந்த முருகையா, ராஜ்குமார், காமேஷ்  (15-வயது சிறுவன்) ஆகிய 3 பேரையும்  தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News