செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 20 பேர் அனுமதி

Published On 2021-06-05 02:48 GMT   |   Update On 2021-06-05 02:48 GMT
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் தற்போது 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் ஏற்படத் தொடங்கி உள்ளது. கருப்பு பூஞ்சை நோய் போன்ற அறிகுறியுடன் பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இறந்து உள்ளார். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் நேரு கூறியதாவது:-

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் தற்போது 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இதுவரை அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இருந்த 3 பேர் இறந்து உள்ளனர். நேற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவர் இறந்து உள்ளார். அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்படவில்லை. கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் விருப்பத்தின் பேரில் மேல்சிகிச்சைக்காக நெல்லை, மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News