செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அம்மாபேட்டை ஒன்றியத்தில் 6 மனுக்கள் மீது நடவடிக்கை- முதல்வர் உத்தரவு

Published On 2021-06-04 09:48 GMT   |   Update On 2021-06-04 09:48 GMT
பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதல்வருக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மெலட்டூர்:

அம்மாபேட்டை ஒன்றியம், இடையிருப்பு, விழிதியூர் கிராமமக்கள் உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கோரிக்கை மனுக்களை அனுப்பியிருந்தனர். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது முதல்வராக பதவியேற்ற நூறு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். அந்த வகையில் அம்மாபேட்டை ஒன்றியத்தில் பெறப்பட்ட மனுக்களில் 6 மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இடையிருப்பு, விழிதியூர் ஊராட்சிகளில் குடியானத் தெரு, ஆதிதிராவிடர்தெரு சாலைவசதி, விழிதியூரில் சாய்ந்த மின் கம்பங்கள் சீரமைக்க கோரிய மனுக்கள் மற்றும் ஆனந்தம் வாயக்கால் தூர்வாரிட கோரிய மனு உள்பட பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து அதனை செயல்படுத்திட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட முதல்வருக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News