செய்திகள்
கோப்புபடம்

அவினாசி பைபாஸ் சாலையில் வாகன சோதனை தீவிரம்

Published On 2021-06-04 06:42 GMT   |   Update On 2021-06-04 12:09 GMT
போலி ‘பாஸ்’ மூலம் வாகன ஓட்டிகள் பயணிப்பதை தவிர்க்க திருப்பூர் கோவை-சேலம் பைபாஸ் ரோட்டில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அவினாசி:

முழு ஊரடங்கையொட்டி பிற மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு  இ-பாஸ் விண்ணப்பித்து  பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருப்பூர் கோவை-சேலம் பைபாஸ் ரோட்டில் தினமும் அதிகளவு வாகனங்கள் பயணிக்கின்றன.சிலர் அங்கீகரிக்கப்படாத அனுமதி சீட்டு உள்ளிட்டவற்றை காட்டி பயணிக்க முற்படுகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.

இதை தவிர்க்க திருப்பூர் தெக்கலூர் சோதனைச்சாவடியில்  கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இங்குள்ள ரோடு இரண்டு  டிராக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சொந்த பயன்பாட்டுக்காக செல்லும் கார், வேன், ஜீப், மோட்டார் சைக்கிள்களில் வரும் வாகன ஓட்டிகளை பிரத்யேகமாக கண்காணிக்கவும், அவர்களது விவரங்களை துல்லியமாக பரிசோதித்து  அனுமதிக்கும் வகையிலான மற்றொரு ‘டிராக்‘ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளை அவிநாசி டி.எஸ்.பி., பாஸ்கரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
Tags:    

Similar News