செய்திகள்
கருப்பு பூஞ்சை (கோப்புப்படம்)

கொரோனா பாதிப்பு இல்லாத சிறுமிக்கு கருப்பு பூஞ்சை- பெற்றோர் அதிர்ச்சி

Published On 2021-06-03 06:50 GMT   |   Update On 2021-06-03 06:50 GMT
திண்டுக்கல் அருகே கொரோனா தொற்று இல்லாத 5 வயது சிறுமிக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு இருப்பது பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு கடந்த 30ந் தேதி வலது கண்ணில் வீக்கம் ஏற்பட்டது. பெற்றோர் அவரை மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்து பார்த்ததில் சிறுமியின் கண்ணில் இருந்த கருவிழி நகர்ந்து இருந்தது.

இதனால் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகித்தனர். ஸ்கேன் செய்து பரிசோதனை செய்த போது கருப்பு பூஞ்சை உறுதியானதால் மதுரையில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.


கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டவர்களுக்கே கருப்பு பூஞ்சை நோய் வரும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பு வராத தங்கள் குழந்தைக்கு அந்நோய் தாக்கி இருப்பது அவரது பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் 312 படுக்கைகள் தயார்

இது குறித்து திண்டுக்கல் அரசு மருத்துவர் தெரிவிக்கையில், தற்போது வரை சிறுமிக்கு கருப்பு பூஞ்சை நோய்தானா என உறுதியாக கூற முடியாது. திண்டுக்கல் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் வருபவர்களை மதுரைக்கு அனுப்பி வைக்கிறோம். அங்கு பரிசோதனை செய்த பிறகுதான் அதன் உண்மைத்தன்மை தெரியவரும். அது போல் சிறுமியின் நோய் அறிகுறி குறித்தும் உறுதியாக தற்போது கூற இயலாது என்றார்.

Tags:    

Similar News