செய்திகள்
கணியூர் ஆரம்ப சுகாதார நிலையம்.

கடத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம்- முதல்வரிடம் கோரிக்கை

Published On 2021-06-03 06:27 GMT   |   Update On 2021-06-03 06:27 GMT
மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தவும் கடத்தூர் பகுதியில் சுகாதார நிலையம் அமைக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கமலவேணி தமிழக முதல்-அமைச்சருக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கணியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கடத்தூர், கணியூர், ஜோதம்பட்டி, வேடபட்டி, மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், மைவாடி, தாந்தோணி, துங்காவி, மற்றும் காரத்தொழுவு பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது 4 மருத்துவர்கள் 5 செவிலியர்கள் மட்டும் உள்ளனர். தினசரி பல நூறு நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் போதிய கட்டிட வசதி இன்றியும் மருத்துவ உபகரணங்கள் குறைவாகவும், உள்ளது. இதற்கு தீர்வாக இந்த நிலையத்தை மடத்துக்குளம் வட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். 

அடுத்ததாக கடத்தூர் ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மருத்துவ சிகிச்சை பெற போதிய மருத்துவ கட்டமைப்பு இல்லை. இதனால் அவசர சிகிச்சை பெற 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கும், மேல் சிகிச்சை பெற 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உடுமலை மருத்துவமனைக்கும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கடத்தூர் ஊராட்சி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 
Tags:    

Similar News